கோபி: கோபி பவளமலை முருகன் கோவிலில், கோ பூஜை நடந்தது. கோபி முருகன்புதூர் அருகே, பிரசித்தி பெற்ற பவளமலை முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது. இங்கு செவ்வாய் தோறும் கோமாதா பூஜை, அதையடுத்து பாலாபிஷேகம், பின் சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை நடக்கிறது. இதன்படி நேற்று காலை, மூலவருக்கு அபி?ஷகம் நடந்தது. மலையடிவார கோசாலையில் இருந்து, இரு பசு மாடுகள், ஆகம விதிப்படி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன. அதற்கு கோமாதா பூஜை செய்யப்பட்டது. மாடுகளின் கொம்புகள் நடுவே, பெண்கள் வரிசையாக நின்று, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபட்டனர். பின் திரிசதை அர்ச்சனை, மகா தீபாராதனை முடிந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.