குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2018 12:05
குளித்தலை: மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். குளித்தலை முத்துபாலசமுத்திரம் மாரியம்மன்கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. புதுப்பாளையம் கிராம மக்கள் நேற்று காலை பால்குடம், தீர்த்தக் குடம், அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி, ஊர்வலமாக குளித்தலை பஸ் ஸ்டாண்ட், அக்ரஹாரம் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பின் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.