சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2018 12:05
திண்டுக்கல், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமிக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் மாலையில் இருந்து சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் ஆறு கால பூஜைகள் நடந்தது. திருவோண நட்சத்திர பிறப்பையொட்டி ஹயக்கிரீவருக்கு அபிேஷகம்,அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.