பதிவு செய்த நாள்
10
மே
2018
12:05
நாமக்கல்: உலக நன்மை வேண்டி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், தர்மசம்வர்த்தினி அம்மனுக்கு, நவசண்டி மஹாயாக விழா இரண்டு நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை விநாயகர் பூஜை, கணபதி ?ஹாமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு கணபதி ?ஹாமம், ஸ்ரீநவசண்டி மஹாயாகம், 13 அத்யாய ?ஹாமம், காதம் பலி, துர்கா கணபதி வடுக பைரவ கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை நடந்தது. பின்னர் கலச அபி?ஷகம் நடந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜகோபால், ஆய்வாளர் செல்வி, தர்மசம்வர்த்தினி அம்பாள் பவுர்ணமி மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.