சிவகாசி: சிவகாசி பத்ரகாளி யம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா மே 1 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். 9 ம் நாளான நேற்று முன்தினம் கயர்குத்து திருவிழா நடந்தது. இரவு 7 :00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளி கோயில் வளாகத்தில் வீற்றிருந்தார். 8:00 மணிக்கு வாணவேடிக்கை நடந்தது. 15 நிமிடத்திற்கு மேலாக பேன்சிரக பட்டாசுகள் வானை அலங்கரித்தன. சிவகாசி சுற்றிய கிராம மக்கள் அம்மனை தரிசித்து சென்றனர். இன்று தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளைஇந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.