தேனி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்தபடி உள்ளனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் மே 8 ல் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின் றனர். மூன்றாம் நாளான நேற்று உப்புக்கோட்டை, குண்டலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது முன்னோர்களின் நானா நானா என்ற பாரம்பரியமான கடவுள்பாடலை பாடி, அதற்கு நானா கட்டை எனப்படும் மரக்கட்டை மூலம் ஒலி எழுப்பி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். அது பழங்குடியினரின் பாடல் போல இருந்ததால் பலரும் ரசித்தனர். .உப்புக்கோட்டை ஜெயசந்திரன் கூறியதா வது: மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கவுமாரியம்மன் கோயிலுக்கு நானா பாடல் பாடி வருவதை மக்கள் வழக்கமாக கொண்டுள் ளனர். முன்னோர்களின் வழிவந்த பாடலை பாடி வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும். மக்கள் நோய் இன்றி நலமுடன் வாழ்வர் என்பது நம்பிக்கை, என்றார்.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை 5:15 மணிக்கு நடக்கிறது. அதில் பங்கேற்க பக்தர்கள் குவிந்தபடி உள் ளனர்.