பதிவு செய்த நாள்
12
மே
2018
10:05
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட, கிளிமாலை, பட்டு வஸ்திரங்களை கோவில் அறங்காவலரும், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் தலைவருமான வேணு ஸ்ரீ சினிவாசன், இணையாணையர் ஜெயராமன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
ஸ்ரீரங்கத்தில் சித்திரை ரேவதி நட்சத்திர விழா தேரோட்டம் நாளை(மே13) நடக்கும் நிலையில், ரங்கநாதருக்கு சாற்ற, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் அணிந்த பட்டு மற்றும் கிளியுடன் கூடிய மங்கள பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. நேற்று மாலை 4:45 மணிக்கு கோயில் கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பட்டு சாற்றபட்டு, கிளி மற்றும் மங்கள பொருட்கள் சமர்பிக்கபிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அவைகளை ஸ்தானிகம் ரமேஷ் தலைமையில் கோயில் பிரகாரம், மாடவீதிகள் சுற்றி வந்து, ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் நாகராஜன், வேதபிரான் அனந்தராமன், மணியம் சுதர்சன், ஸ்தானிகம் வெங்கடேஷ் பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீரங்கத்தில் நடக்கும் தேரோட்டத்தில் ஆண்டாள் உடுத்த பட்டு அணிந்து பெருமாள் எழுந்தருள்கிறார்.