Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரதோஷ பூஜையில் நந்திக்கு சந்தனக் ... அனுசரித்து வாழுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனைவி அமைவதெல்லாம்...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2018
05:05

காஞ்சிப்பெரியவரிடம் தன் மனைவியைப் பற்றி புகார் சொல்ல வந்தார் ஒரு பக்தர். “சுவாமி... என் மனைவி அடிக்கடி தலைவலின்னு படுத்துக்கறா. வீட்டு வேலை எதும் செய்யறதில்லை. குழந்தைகளைக் கவனிக்கறதில்லை. பெரும்பாலும் ஓட்டலில் தான் நான் சாப்பிடுறேன்.  அவளுக்கு உடம்பு படுத்தறது. அதனால....” என்று சற்று இழுத்தார் பக்தர்.  “அதனால... என்ன செய்யறதா உத்தேசம்?”   என்று சுவாமிகள் சலனமற்று இருந்தார்.  “நீ இதை உன் சொந்தக்காராகிட்ட சொன்னா டைவர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்வா. நண்பர்களிடம் சொன்னா, பிறந்த வீட்டுக்கு அனுப்பிடுன்னு சொல்வா. என்ன பண்ணப் போற? டைவர்சா? பிறந்த வீடா?  உன் முடிவு என்ன? மனதில் ஓடும் எண்ணங்களை சுவாமிகள் புரிந்து விட்டதை எண்ணி பக்தர் திகைத்தார்.  “மனைவியைப் பத்தி புகார் சொல்றதுன்னா இனி என்னை தரிசிக்க வர வேண்டாம்!” என்று சொன்னார் சுவாமிகள். பதறிப் போனார் பக்தர். “சுவாமீ.... இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்கலாமா.... உங்களை தரிசனம் பண்ணாம  இருக்க முடியுமா... என் பிரச்னையை சொன்னேன்.  அவ்வளவு தான். என்ன பண்ணணும்னு இப்பவே சொல்லுங்கோ.... உடனே பண்றேன்!”

“நிஜமாகவே உன் மனைவிக்கு உடம்பு சரியில்லை. உனக்கு உடம்பு சரியில்லைன்னா அவள்  வீட்டை விட்டுப் போயிடுவாளா? இப்பவே நீ அவளிடம் ரெண்டு மடங்கு அன்போட பணிவிடை செய்வியா...... உன் குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னா என்ன பண்ணுவே? டைவர்ஸ் பண்ணுவியா? இல்லை எங்கயாவது ஆதரவு இல்லாமல் கைவிடுவியா?பக்தர் விக்கித்து நின்றார். “தலைவலிக்கு என்ன வைத்தியமோ அதைப் பண்ணு. நல்ல டாக்டரா பாத்து அழைச்சுண்டு போ. நீ ஆதரவா இருந்தாலே, வியாதி பாதி குணமாயிடும். அவளை ஜாக்கிரதையா கவனிப்பது உன் பொறுப்பு. நோய்வாய்ப்பட்ட மனைவிக்குப் பணிவிடை பண்ணு. அவள் சீக்கிரம் குணமாயிடுவா....  மனைவி, குழந்தைகளோட நீ சவுக்கியமா இருக்கணும்” என்று ஆசியளித்து குங்குமம் கொடுத்தார் சுவாமிகள்.  மனைவி அமைவதெல்லாம்.... இறைவன் கொடுத்த வரம்
என உணர்ந்த பக்தரின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்! திருப்பூர் கிருஷ்ணன்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar