பைபிள் வசனம் ஒன்றில், “பெண் இல்லாமல் மனிதன் இல்லை, மனிதன் இல்லாமல் பெண்ணும் இல்லை,” எனக் கூறப்பட்டிருக்கிறது. இது நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தை. எதையெடுத்தாலும், ஆண், பெண் என்ற போட்டி மனப்பான்மை வளர்ந்து கொண்டிருக்கிறது. குடும்பங்களில் ஒருவருக்கு ஒருவர் அடிமைப்படுத்துவதில் சந்தோஷம் கொள்கின்றனர். இது விவாகரத்து வரை போய், ஆணின்றி தனித்து வாழலாம் என பெண்ணும், அவளின்றி தனித்து வாழலாம் என ஆணும் முடிவெடுக்கின்றனர். விளைவு சமாதானம் மறைந்து, ஆண்டவரின் வார்த்தைகளுக்கு எதிராக அவர்கள் நடந்து கொள்கின்றனர்.