மனித மனம் போல கொடுமையான பொருள் இவ்வுலகில் ஏதுமில்லை. இதை மிகக்கடுமையாக வர்ணிக்கிறது பைபிள். “மனுஷருடைய இருதயத்திற்குள்இருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலை பாதகங்களும், பொய் சாட்சிகளும், கெட்ட சிந்தனைகளும் புறப்பட்டு வரும்,” என்கிறது பைபிளில் ஒரு வசனம். சிலர், தாங்கள் செய்வதெல்லாம் நியாயம் எனக்கருதி, மனம்போன போக்கில் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு நியாயமாகத் தெரியும் விஷயம் மற்றவர்களுக்கு அநியாயம் விளைவிப்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகி றீர்கள். தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார். மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது,” என்று பைபிள் வசனமும் மனித மனத்தின் தன்மையைத் தான் குறிப்பிடுகிறது.