பதிவு செய்த நாள்
15
மே
2018
01:05
குளித்தலை: மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, வாலாந்தூர் கிராம மக்கள், பால் குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் அருகே, வாலாந்தூர் கிராம மக்கள், 500க்கும் மேற்பட்டோர், கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பால்குடம் எடுத்து, அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி மேள தாளத்துடன், கோர்ட், பஸ் ஸ்டாண்ட், அக்ரஹாரம் வழியாக, குளித்தலை மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், மணத்தட்டை, எழுநூற்று மங்களம் கிராம மக்கள், காவிரி ஆற்றிலிருந்து, பால்குடம், அக்னி சட்டி எடுத்து வந்தனர். அலகு குத்தி, குழந்தைகளை தொட்டிலில் போட்டு, நேர்த்திக் கடன் செலுத்தினர்.