பதிவு செய்த நாள்
15
மே
2018
01:05
பாலக்காடு, எலப்புள்ளி, தேனாரிமத்தியாரணிய மகா சிவன்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மே 25 காலை 8.17 முதல் 9.17 வரை நடைபெற உள்ளது. இக்கும்பாபிஷேகம் பெரும்பாவூர் சாந்தமுட்டம் இல்லத்து ஸ்ரீஸ்ரீ வாசுதேவன் நம்பூதிரியின் தலைமையில் தாந்திரிக முறைப்படி பெரியமன் பிரமோத குஞ்ச சிவன்கோயில் மேல் சாந்தி கிருஷ்ண பிரசாத் ஆகியோரால் நடைபெற உள்ளது. இக்கோயில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவன்கோயில்களில் 54வது சிவன்கோயிலாகும்.
நிகழ்ச்சிகள்
21.05.2018
காலை - நடைதிறப்பு நிர்மாலய தரிசனம் தொடர்ந்து உச்சி பூஜை
மாலை 5.00 - நடைதிறப்பு மகா தீபாராதனை மாலை 7.00 நாட்டியாலாயாவின் நடன நிகழ்ச்சிகள் ஸ்ரீ சுவாமி சுனில்தாஸ் அவர்கள் துவக்கி வைப்பார்கள்.
22.05.2018
காலை - நடைதிறப்பு நிர்மாலய தரிசனம் தொடர்ந்து உச்சிபூஜை, தீபாராதனை, நடையடைப்பு மாலை 5.00 - நடைதிறப்பு - ராதாபாய் வழங்கும் பக்தி பாடல்கள் தொடர்ந்து மாலை 7.00 டி.வி. புகழ் சிவதாஸ் -குழு காமெடி நிகழ்ச்சி நடைபெறும்.
23.05.2018
காலை - நடைதிறப்பு நிர்மாலய தரிசனம் பூஜைகள் உச்சிபூஜை, மகா தீபாராதனை மாலை 5.00 - நடைதிறப்பு தொடர்ந்து ஆச்சார்யவர்ணம் பிரசாத சுத்தி, வாஸ்து ஹோமம், உதஷோகன ஹோமம். வாஸ்துபலி பிரசாதபூதை, வாஸ்து புண்ணியாகம், முதலியவை.
24.05.2018
காலை 5.00 - ஸ்ரீகணபதி ஹோமம் பிம்பசுத்தி, சதசுத்தி, பஞ்சாங்கம், தாரா, பஞ்சகாவ்யம், 25 கலச பூஜை தொடர்ந்து பிராய சித்த ஹோமம், பிராய சித்த கலசாபிஷேகம்.
மாலை 5.00 தொடர்ந்து பூஜைகள்
25.05.2018
காலை 5.00 - அதிவாச ஹோமம், விடத்தல் பூஜை, பிரதிஷ்டா கலசாபிஷேகம், பிரகிவுட பூஜை, கும்பாபிஷேகம் காலை 8.17 முதல் 09.17 வரை - உச்சி பூஜை, மகா தீபாராதனை, பிரசாத வினியோகம், மகா அன்னதானம், ஸ்ரீராமானந்த மூர்த்தி சுவாமிகள் துவக்கி வைப்பார்கள்.