Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எமதர்மர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் பயணத்திற்கு 1.70 லட்சம் பேர் பதிவு
எழுத்தின் அளவு:
அமர்நாத் பயணத்திற்கு 1.70 லட்சம் பேர் பதிவு

பதிவு செய்த நாள்

17 மே
2018
12:05

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் உள்ள, அமர்நாத் குகை கோவிலுக்கு செல்ல, இதுவரை, 1.70 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் அமைந்துள்ள, அமர்நாத் குகை கோவிலில், பனி லிங்க தரிசனம் செய்ய, ஆண்டுதோறும், லட்சக் கணக்கான பக்தர்கள், புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.இந்த பயணத்தில் பங்கேற்க விரும்புவோர், முன்பதிவு செய்வது அவசியம். இந்த ஆண்டுக்கான, அமர்நாத் புனித யாத்திரை, அடுத்த மாதம், 28ல் துவங்கி, 60 நாட்கள் நடக்க உள்ளது. இதற்கான முன்பதிவு, மார்ச், 1ல் துவங்கியது. நாட்டின் பல பகுதிகளில் செயல்படும், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு - காஷ்மீர் வங்கி மற்றும் எஸ் வங்கிகளின், 440 கிளைகளில், இதற்கான முன்பதிவு செய்யப்படுகிறது.இதுவரை, 1.39 லட்சம் பேர், தரை வழியாகவும், 28 ஆயிரத்து, 516 பேர், ஹெலிகாப்டர் மூலமும் யாத்திரை செல்ல முன்பதிவு செய்துள்ளனர். 2,122 வெளிநாட்டினரும், அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற முன் பதிவு செய்துள்ளனர். 13 வயதுக்கு உட்பட்ட மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டோர், இந்த யாத்திரையில் பங்கேற்க அனுமதி கிடையாது.

முழு உடல் நல பரிசோதனைக்குப் பின்பே, யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். யாத்திரையில் பங்கேற்க விரும்புவோர், உடனடியாக பதிவு செய்யும் வகையில், ஆன் ஸ்பாட் ரெஜிஸ்ட்ரேசன் மையங்களும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar