அலங்காநல்லுார், அலங்காநல்லுார் அருகே கல்லணையில் கருங்காலுடைய ஐயன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை, கணபதி ஹோமம் நடந்தன. நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.