மாரியம்மன் கோவில் திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2018 01:05
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த வாரம் பூச்சொரிதலுடன் தொடங்கியது. திருவிழா முன்னிட்டு நேற்று காலை, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு, கரூர் - திருச்சி பழைய சாலை வழியாக, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நாளை நடக்கிறது. கோவில் நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.