“என்னைப் பற்றி கவலைப்படவே எனக்கு நேரமில்லை. இதில், உன் கவலை எனக்கு எதற்கு?”என்று சுயநலம் கொண்டவர்களே பூமியில் அதிகம். இப்படிப்பட்டவர்களை கண்டிக்கிறார் நபிகள் நாயகம். “உங்கள் அண்டைவீட்டார், உங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆகியோரின் சீர்திருத்தம், கல்வி பற்றியும் கவலை கொள்ளுங்கள். அதுவும் உங்களுடைய கடமை என்று கருதுங்கள். சிலர் தம் அண்டைவீட்டாரிடம் இறைநெறி பற்றிய அறிவை தோற்றுவிப்ப தில்லை. மேலும், இறைநெறியை அவர்களுக்கு கற்று தருவதும் இல்லை. இறைநெறி குறித்து அறியாமல் இருந்தால் ஏற்படக்கூடிய படிப்பினை உணர்த்தும், விளைவுகள் குறித்தும் அவர்களுக்கு விளக்குவதில்லை. மேலும், அவர்களை தீய செயல்களை விட்டு தடுப்பதும் இல்லை”என்று அவர் கூறுகிறார்.
இது பற்றி அவர் மேலும் கூறும் போது, “சிலர் தம் அண்டை வீட்டாரிடம் இருந்து இறைநெறி பற்றிய அறிவை பெறுவதில்லை. இறைநெறியின்பால் உறவுகளை உருவாக்கி கொள்வதுமில்லை மக்கள் தம் அண்டை வீட்டாருக்கு உபதேசம் செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்ல விஷயங்களை அறிவுறுத்த வேண்டும். தீயவற்றில் இருந்து அவர்களை தடுக்க வேண்டும்” என்கிறார்.