பதிவு செய்த நாள்
19
மே
2018
05:05
* மே 19, வைகாசி 5, சனி: திருச்செந்தூர், மதுரையில் வைகாசி விசாகம் உற்ஸவம் ஆரம்பம், நம்பியாண்டார் நம்பி குருபூஜை, விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநாதர் பூச்சப்பரம்.
* மே 20, வைகாசி 6, ஞாயிறு: முகூர்த்த நாள். சஷ்டி விரதம், நமிநந்தியடிகள், சேக்கிழார் குருபூஜை, நாலுகவிப் பெருமாள் நல்லான் திருநட்சத்திரம், சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி கோயில் வைகாசி உற்ஸவம் ஆரம்பம்.
* மே 21, வைகாசி 7, திங்கள்: சோமாசிமாற நாயனார் குருபூஜை, மதுரை கூடலழகர், சிவகங்கை அரியக்குடி ஸ்ரீநிவாசப்பெருமாள், கடலூர் மாவட்டம் காட்டுபரூர் ஆதிகேசவர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப் பெருமாள் ராஜாங்க அலங்காரம், கரிநாள்.
* மே 22, வைகாசி 8, செவ்வாய்: அஷ்டமி விரதம், சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் அம்மன் தபசுக்காட்சி, மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜனகை மாரியம்மன் சிம்ம வாகனம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநாதர் திருக்கல்யாணம்.
* மே 23, வைகாசி 9, புதன் : தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் சிவன் திருக்கல்யாணம், பழநி முருகன் தங்கமயில் வாகனம், மதுரை கூடலழகர் அனுமன் வாகனம், திருமோகூர் காளமேகப் பெருமாள் சேஷ வாகனம்.
* மே 24, வைகாசி 10, வியாழன்: மதுரை கூடலழகர் கருட வாகனம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநாதர் தேர், சிவகங்கை மாவட்டம் சிவன் ரிஷப சேவை, நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி பூதவாகனம்.
* மே 25, வைகாசி 11, வெள்ளி: முகூர்த்த நாள். ஏகாதசி விரதம், நாகைமாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காளிங்க நர்த்தனம், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி வெள்ளித் தேர், கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் சிவன், திருச்சி மாவட்டம் உத்தமர்கோயில் சிவன் திருக்கல்யாணம்.