Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன கல்வி தெய்வங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அகிலத்தை வாழ வைக்கும் அன்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2018
05:05

கொர்ரி டென் பூம் அம்மையார் ஜெர்மனி நாட்டில் குடியேறிய வெளிநாட்டவர். இவரது தந்தை வில்லியம். இயேசுவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இரண்டாம் உலகப்போர் நடந்த போது, ஜெர்மனியை ஹிட்லர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். யூத இனத்தவர்களை ஜெர்மனியிலிருந்து மட்டுமின்றி உலகத்தில் இருந்தும் அழித்துவிட வேண்டும் என ஹிட்லர் கங்கணம் கட்டியிருந்தார். யூதமக்கள் உயிருக்கு பயந்து ஜெர்மனியை விட்டு வெளியேறினர். ஆனால், வில்லியம் குடும்பத்தினர் யூதர்களை காப்பாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து வில்லியம், அவரது மகள்கள் கொர்ரி, பெட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வில்லியம் சிறையிலேயே இறந்து விட்டார். சிறையில் இருந்த கொர்ரியும், பெட்சியும் கைதிகளை ஒன்று கூட்டி பைபிளை வாசித்தனர். ஒவ்வொருவருக்காகவும் ஜெபித்தனர். இதனால் கைதிகள் ஆறுதலடைந்தனர். இதையறிந்த காவலர்கள் பெட்சி,  கொர்ரியை சித்ரவதை செய்யத் தொடங்கினர்.  ஒரு கிறிஸ்துமஸ் நாளில் இயேசு மண்ணுலகில் பிறந்த நிகழ்வை விளக்கிக் கொண்டிருந்த பெட்சியை, காவலர்கள் கொலை செய்துவிட்டனர். பெட்சியின் மரணம் கொர்ரியை பாதித்தது. என்றாலும் ‘விசுவாசிக்கிறவன் பதறான்’ என்ற தேவ வசனத்திற்கு ஏற்ப, தைரியத்தை வரவழைத்துக் கொண்டார். இதற்கிடையில், ஒருமுறை வேறு ஒரு பெண்ணுக்கு பதிலாக, தவறுதலாக கொர்ரியை விடுதலை செய்து விட்டனர். இது தான் சமயம் என, கொர்ரி வெளிநாடு சென்றார்.  அதன் பிறகு 64 நாடுகளில் பயணம் செய்து இயேசுவைப் பற்றி பேசினார்.

‘தேவனுக்காக நாடோடியான கதை’,  ‘மறைவிடம்’ ஆகிய புத்தகங்களை எழுதினார். அவை உலகப் பிரசித்தி பெற்றன. 1947ல் அவர், தன்னை கொடுமைக்கு உள்ளாக்கிய சிறை இருந்த ரேவன்ஸ்பர்க் நகரத்திற்கு உரை நிகழ்த்த வந்தார்.  அவரிடம் ஆசி பெற மக்கள் வரிசையில் வந்தனர். அதில், கொர்ரியை கொடுமைப் படுத்திய காவலர் ஒருவரும் வந்தார். ‘என்னை கொடுமைக்குள்ளாக்கியவனும் வரிசையில் வருகிறான். அவனை மன்னிப்பதா, கூடாதா?’ என ஒரு போராட்டம்... அவரின் மனதிற்குள் ஓடியது.  வரிசை நகர்ந்தது. காவலனும் அருகில் வந்தான். அப்போது, இயேசுவின் நினைவு எழுந்தது.  “என்னை சிலுவையில் அறைந்தவர்களையும், கொடுமைப் படுத்தியவர் களையும் நான் மன்னித்தேன். என்னைப் போல நீயும் அவனை மன்னிக்கக் கூடாதா?”என்று அவர் சொல்வது காதில் கேட்டது.  இதையடுத்து அந்த காவலரின் கரங்களைப் பற்றியபடி கொர்ரி அவருக்காக ஜெபித்தார். “நான் உங்களுக்கு சொல்லுகிறேன்.  உங்கள் சத்ருக்களை சிநேகியுங்கள்.  உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். இப்படி செய்வதனால் நீங்கள் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராய் இருப்பீர்கள்”என்ற பைபிள் வசனம் அம்மையாரின் வாழ்வை பொறுத்தவரை நிஜமானது. அன்புமனதால் தான் இந்த அகிலமே வாழ்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar