பதிவு செய்த நாள்
21
மே
2018
02:05
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி வெள்ளக்குட்டி கரடு, விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை, நேற்று நடந்தது. மழை வேண்டி மற்றும் ஊர் மக்கள் சுபிட்சம் பெற, மூலவருக்கு பால், இளநீர், திருமஞ்சனம், பன்னீர், தேன் மற்றும் பழ வகைகளால் அபி?ஷகம் செய்யப்பட்டு, பொங்கல், சுண்டல் படையல் வைத்து, பூஜை நடந்தது. ராஜ அலங்காரத்தில், விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர்.