Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் ... ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் பணி முடக்கம் : தாமதமாவதால் பாகங்கள் முறிவு ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோடையிலும் பச்சை பசேல் புல்வெளி: சுற்றுலா பயணியரை கவரும் கைலாசநாதர் கோவில்
எழுத்தின் அளவு:
கோடையிலும் பச்சை பசேல் புல்வெளி: சுற்றுலா பயணியரை கவரும் கைலாசநாதர் கோவில்

பதிவு செய்த நாள்

22 மே
2018
11:05

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பச்சை நிற கம்பளம் விரித்தாற் போல வளர்ந்துள்ள புல்வெளி, சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்துள்ளது. ‘ராஜசிம்மேஸ்வரம்’ என அழைக்கப்படும், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், முதலாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்ம பல்லவனால், கி.பி., 700 – 728ம் ஆண்டில் கட்டப்பட்டது.  இக்கோவிலுக்கு தினமும், ஏராளமான வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். தற்போது, பள்ளி கோடை விடுமுறையால், பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவ மழை போதுமான அளவு பெய்யாததால் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் பெரும்பாலானவை வறண்டுள்ளன.

தற்போதுள்ள கத்திரி வெயிலுக்கு, விளைநிலங்களில் புல், பூண்டுகளும் கருகியுள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பச்சை நிற கம்பளம் விரித்தது போல, பச்சைப்பசேல் என, புற்கள் வளர்ந்துள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களை, புல்வெளி பகுதி கவர்ந்து இழுப்பதோடு, பசுமையான பச்சை நிறம், கண்களுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால், கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணியர், மர நிழலில், புல் தரையில் அமர்ந்து இளைப்பாறிய பின் அங்கிருந்து செல்கின்றனர்.

தகவல் பலகை அவசியம்:
கைலாசநாதர் கோவில், தல வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில், தொல்லியல் துறை சார்பில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், தகவல் பலகை ஒன்று வைக்கப்பட்டது. தற்போது, பலகை மட்டுமே உள்ளது. எழுத்துக்கள் மறைந்து விட்டன. இதனால், சுற்றுலா பயணியர், கோவில் வரலாற்றை தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, புதிய தகவல் பலகை வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.  – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar