வரம் பெற்ற சூரபத்மனை என்னால் கொல்ல முடியாது. என்னைக் காட்டிலும் வலிமை மிக்க ஒருவன் வரவேண்டும் என்று சிவனே முருகனை படைத்தார். அவன் தன்னை விட ஞானம் மிக்கவன் என்பதை உலகிற்கு உணர்த்த, மகனிடமே உபதேசம் பெற்றுக் கொண்டார். எதிலும் தான் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவன் கூட, தன் பிள்ளை தன்னை விட முன்னேறி, தன்னையே தோற்கடிக்க வேண்டும் என்று விரும்புவான். இதனை புத்ராத் இத்தேச்பராஜயம் என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிடுவர். பரம்பொருளான சிவனும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தன்னை விட தன் பிள்ளைகள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்க விரும்பினார். ஒருவர் யானை பலத்துடன் விளங்கினார். இன்னொருவர் வேல் எறிந்தால், அது மலையையே பிளக்கும் சக்தியைப் பெற்றிருந்தார்.