Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி முருகன் கோவிலில் வைகாசி ... அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னிதோஷ நிவர்த்தி 1,008 கலச பூஜை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னிதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் 5 தேர்திருவிழா
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் 5 தேர்திருவிழா

பதிவு செய்த நாள்

26 மே
2018
09:05

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று (மே 25)ல் 5 தேர் திருவிழாவில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுந்தனர்.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ் வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்ச விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் உற்சவம் நடைபெற்றது.கடந்த 18ம் தேதி அடியார்க்கு நால்வர் புஷ்ப பல்லக்கு ஊர்வலம்.கடந்த 20ம் தேதி செண்பகதியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் (மே 24) தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.அதைத் தொடர்ந்து நேற்று (மே 25)ல் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் ஆண்டுதோறும் செண்பகத்தியாகராஜர்,நிலோத்தம்பாள் ஆகிய இரு தேர்திருவிழா நடைபெற்றது.மேலும் கடந்தஆண்டு முதல் புதிதாக வினாயகர்,முருகன்,சண்டியோஸ்வர் ஆகிய மூன்று தேர் உள்ளிட்ட 5 தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. தேர் திருவிழாவை கலெக்டர் கேசவன்,கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த ராஜா,கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். 5தேர்கள் தெற்கு வீதியில் புறப்பட்டு வடக்கு, மேற்குவீதி வழியாக நிலைக்கு வந்தடைந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் தியாகராஜா தியாகராஜா கேஷங்கள் முழுங்க 5தேர்களை பக்தர்கள் பக்தி வரவசத்துடன் வடம் பிடித்து இழுந்தனர்.மேலும் இன்று(மே 26)ல் சனீஸ்வர பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது.நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar