இளையான்குடி:இளையான்குடி வடக்கு சமுத்திரத்தில்முத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள்,கணபதி ஹோமம் உட்பட ஹோம ங்கள் நடந்தது.தொடர்ந்து காலை 8:00 மணிக்கு கலசங்களில் புனிதநீர்ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முத்து விநாயகருக்குசிறப்பு அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்யப் பட்டது.கோயிலில் அன்னதானமும் நடைபெற்றது. கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.