நெட்டப்பாக்கம் ஏம்பலம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2018 03:05
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று (மே 25)ல் நடந்தது.
வில்லியனூர் அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர், பஞ்சபாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங் கியது.
தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும், சுவாமி வீதியுலா நடந்தது.
கடந்த20ம் தேதி திரவுபதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று (மே 25)ல் நடந்தது. இதில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத் தினர்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி, வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராசு, ராமதாஸ், சுப்புராயன், சுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர்.