பதிவு செய்த நாள்
26
மே
2018
03:05
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட வண்டிக்காரன் கொட்டா யில் உள்ள, கோட்டை செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 24 காலை, 4:30 மணிக்கு, கணபதி பூஜை, கொடியேற்றம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, கும்ப அலங்காரம், கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம் நடந்தது. 9:00 மணிக்கு, சுவாமியின் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. நேற்று (மே 25)ல் காலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. 9:00 மணிக்கு மேல், கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.