திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 18ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று மதியம் 3:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை யுடன் துவங்கியது. ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் அமர்ந்த ஒரு தேரையும் சிநேகவல்லி அம்மன் அமர்ந்த மற்றொரு தேரையும் பக்தர்கள் இழுத்தனர். மாலை 5:45 மணிக்கு நிலைக்கு சென்றடைந்தது.