பதிவு செய்த நாள்
28
மே
2018
03:05
சங்ககிரி: சங்ககிரி, ஒருக்காமலை அன்னதான ஆஞ்சநேயர் கோவிலில், மழை வேண்டி, சிறப்பு யாக பூஜை நடந்தது. சங்ககிரி, மஞ்சக்கல்பட்டி கிராமம், ஒருக்காமலை அடிவாரத்தில் உள்ள, ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் விவசாயம் செழிக்க, தொழில் பெருக வேண்டி, சிறப்பு யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு புண்யாகம், பஞ்ச கவ்யம், வருண பூஜை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, கோ பூஜை, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.