பதிவு செய்த நாள்
28
மே
2018
03:05
திருச்சிற்றம்பலம்கூட்ரோடு: கிளியனுார் அகஸ்தீஸ்வரர் கோவிலில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஏகாதச ருத்ர ஹோம பாராயணம், அபிஷேகம் நடந்தது. கிளியனுார் அகிலாண்டேஸ்வரி அம்மாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு 5ம் ஆண்டு ஏகாதச ருத்ர பாராயண ஹோமம் மற்றும் ருத்ராபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை 7.00 மணிக்கு மங்கள இசை , 7.15 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. காலை 8.00 மணிக்கு கலச பூஜை, 11 ருத்ரன் ஆவாஹனம், 8.30 மணிக்கு ஏகாதச ருத்ர பாராயணம், 11.30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு கலசாபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 12.00 மணிக்கு மஹா தீபாராதனை செய்து, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு பிரதோஷ அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.