முருகப்பெருமானுக்கு கந்தர்ப்பம் நைவேத்யம் செய்தால் மனக்கவலை தீரும்; மகிழ்ச்சி நிலைக்கும்.
என்ன தேவை பச்சரிசி – 400 கிராம் புழுங்கல் அரிசி – 100 கிராம் உளுந்தம் பருப்பு – 100 கிராம் வெந்தயம் – 1 ஸ்பூன் வெல்லம் – 400 கிராம் தேங்காய் – 1 மூடி ஏலக்காய்த்தூள் – 1/2 ஸ்பூன் எண்ணெய் – - 1/2 கிலோ
செய்வது எப்படி?
அரிசி, உளுந்து, வெந்தயத்தை நன்கு களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஊறவைத்த அரிசியை அரைத்து நைசாக வந்ததும், வெல்லம் சேர்த்து அரைக்கவும். பிறகு மாவுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய்ப் பொடி சேர்த்து அரைக்கவும். மாவை தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கரண்டியால் மாவை ஊற்றவும். அது மேலே எழும்பி வந்தவுடன் மறுபுறம் திருப்பி பொன்னிற மானவுடன் எடுக்கவும்.