பிரணவ மந்திர வடிவமான மயில் மீது முருகன் காட்சியளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் மயிலுக்கு “மந்திர மயில்” என்றும் பெயருண்டு. மயில் மீது உள்ள முருகனை தரிசிப்பதை “குக ரகசியம்” என்று ஞானிகள் சொல்வர். பாம்பன் சுவாமிகள், “கொணர்தி உன் இறைவனையே” என்று மயில் மீது பத்து பாடல் பாடியுள்ளார். இதில் முருகனைச் சுமந்து நேரில் காட்சியளிக்கும்படி மயிலிடம் வேண்டுகிறார். இதை தினமும் படிப்போருக்கு முருகனை தரிசிக்கும் பாக்கியம் உண்டாகும்