கோடை காலமான வைகாசி விசாகத்தில் முருகனுக்கு பால்காவடி, இளநீர்க்காவடி செலுத்துவது சிறப்பு. இளநீர், பால் அபிஷேகத்தால் தன் மனம் குளிரும் முருகன், பக்தர்கள் விரும்பும் வரங்களை வழங்குவார். தற்போது பால்காவடியாக இல்லாமல் குடத்தில் நிரப்பப்பட்டு, தலையில் சுமந்த படி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தில் அதிகாலை 5:00 முதல் மதியம் 2:00மணி வரை தொடர்ந்து முருகனுக்கு பால் அபிஷேகம் நடக்கும்.