அலங்காநல்லுார், பாலமேடு அருகே வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோயிலில் ஜூன் 3 புரவி எடுப்பு திருவிழாவிற்காக சுவாமி சிலைகள் தயாராகி வருகின்றன. இங்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருவிழா நடத்த கிராமத்தினர் முடிவு செய்து பூஜாரி, அரண்மனையார் மூலம் பிடிமண் கொடுக்கப்பட்டது. இரு மாதங்களாக அய்யனார், கருப்புசாமி, குதிரைகள், காளைகள், பசுக்கள், திருப்பாதங்கள், திருமண தம்பதிகள் உள்ளிட்ட பல்வேறு உருவசிலைகள் தயாரிக்கப்பட்டு வர்ணங்கள் பூசும் பணி நடந்து வருகிறது. இத்திருவிழாவையொட்டி ஜூன் 2 அய்யனார் சுவாமிக்கு பூணுால் சாற்றுதல், ஜூன் 3 காலை புரவி எடுப்பு திருவிழா நடக்கும். மதுரை உட்பட வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறையினர், ஐந்து கிராம மக்கள் செய்து வருகின்றனர்.