திருமங்கலம், திருமங்கலம் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பெண் பக்தர்கள் 1100 முளைப்பாரிகளை எடுத்து சென்று கோயில்வளாகத்தில் வைத்து அம்மனை வழிபட்டனர். பின், முளைப்பாரியை முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து சென்று குண்டாற்றில் கரைத்தனர்.