திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் 78 வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா மே 19 சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன் தினம் கோயில் தனி சன்னதியில் எழுந்தருளிய பாலமுருகன், சக்தி வேலுக்கு சிறப்பு பாலபிஷேகம், பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் இருந்து பால் குடம் எடுத்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, வேலுராஜன் செய்தனர்.