திருச்சி, கீழ சிந்தாமணி நகரில் பழமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, வைத்தியநாதர் - தையல்நாயகி, ஏகாம்பரேஸ்வரர் - காமாட்சி, மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி என ஐந்து லிங்கங்களும், ஐந்து அம்பாளும் இருப்பதால் இது பஞ்சலிங்கேஸ்வரர் தலம் என அழைக்கப்படுகிறது. இங்கு கங்கைக்குத் தனிச் சன்னதி அமைந்திருப்பது சிறப்பு.