சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் மீனாட்சியம்மை சுந்தரேஸ்வருடன் திருமணக்கோலம் கொண்டு அருளாட்சிபுரிகின்றாள். இந்தத் தலத்தில் உச்சிக் குடுமியுடன் பாலதண்டாயுதபாணி தரிசனம் தருகிறார். இவரை சஷ்டி நாளில் தரிசித்து வணங்கினால் சங்கடங்கள் தீரும் என்பர். தண்டாயுதபாணியை 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறுகிறதாம். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டு உச்சிக்குடுமி தண்டாயுதபாணி அருளால் அந்தாதியும், பிள்ளைத் தமிழும் பாடியிருக்கிறார்.