சின்னாளபட்டி, மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு ஆராதனைகள் நடந்தது.