வீரட்டானேஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2012 11:01
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காலை 6 மணிக்கு நந்திகேஸ்வருர்க்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சவரன பூஜை, மகா அபிஷேகம் நடந்தது. காய்கனிகன் மற்றும் பட்சனங்களால் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். சிவானந்தவள்ளி சமேத வீரட்டானேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் நந்திகேஸ்வரர் முன்பாக எழுந்தருளினார். இதனையடுத்து சோடசோபபச்சார தீபாராதனை நடந்து. பின்னர் சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனமும், 7.30 மணிக்கு ஆண்டாள் சிறப்பு அலங் காரத்தில் வீதியுலா நிகழ்ச் சியும் நடந்தது. இதனை யடுத்து சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமறை நடந்தது.