பாகூர் : சோரியாங்குப்பத்தில் ஆற்றுத் திருவிழா நாளை நடக்கிறது. பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் சார்பில் பொங்கல் பண்டிகையின் ஐந்தாம் நாளன்று சோரியாங்குப்பம் தென் பெண்ணை ஆற்றில் (நதி தீர்த்தவாரி) திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இதேபோல், இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை(19ம்தேதி) காலை நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலநாதர் சுவாமி கோவிலிலிருந்து, மாட வீதிகள் வழியாக தென் பெண்ணை ஆற்றுக்குப் புறப்பட்டு சென்று, 11 மணியளவில் ஆற்றில் நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஆற்றங்கரையில் உள்ள மகா மண்டபத்தில் எழுந்தருளி, மண்டகபடி தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை மூலநாதர் சுவாமி கோவில் தனி அதிகாரி தாசில்தார் பிரபாகரன் மற்றும் அர்ச்சகர்கள் சங்கரநாராயணன், பாபு செய்து வருகின்றனர்.