ஒரு பெண், ஒருவரை நிக்காஹ் செய்த பிறகு அவள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றி நாயகம் சொல்கிறார்.கணவருக்கு மிகவும் உளப்பூர்வமாக அடிபணிந்து வாழுங்கள். அதில் மகிழ்ச்சியும், மனஅமைதியும் காணுங்கள். கணவனுக்கு மாறு செய்யும் (கருத்து வேறுபாடு கொள்தல்) மனைவியின் தொழுகை அவளது தலைக்கு மேலே செல்வதில்லை. ஒரு பெண் தனது கணவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறாள் என்றால், அவள் சுவனத்தின் (சொர்க்கம்) எந்த வாயில் வழியாகவும் நுழைந்து விடலாம். கணவனின் விவகாரத்தில் மற்றவர்களின் பேச்சை மனைவி ஏற்றுக் கொள்ளக்கூடாது. எந்தப் பெண் தன் கணவனுக்கு நன்றியுடன் இல்லையோ, மறுமையில் அவள் மீது இறைவன் தன் பார்வையைச் செலுத்த மாட்டான்.எனவே சொல்லாலும், செயலாலும் கணவனை மகிழ்ச்சியாக வைக்க முயற்சி செய்யுங்கள். வெற்றிகரமான திருமண வாழ்வின் ரகசியம் இதில் தான் அடங்கியிருக்கிறது.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:42 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி.