குன்னுார்;குன்னுார் அந்தோணியார் திருத்தலத்தின், 132வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.குன்னுார் அந்தோணியார் திருத்தலத்தின், 132வது ஆண்டு திருவிழா வரும், 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம், கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, ஊட்டிமறை மாவட்ட ஆயர் டாக்டர் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, புதுநன்மை, உறுதி பூசுதல் ஆகியவை நடந்தன. குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, தினமும் நவநாள் திருப்பலிகள் நடக்கின்றன.வரும், 17ம் தேதி நடக்கும்முக்கிய பங்கு திருவிழாவில், ஆங்கிலத்தில் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி, மலையாளத்தில் திருப்பலி, அன்பின் விருந்து சிறப்பு கூட்டு திருப்பலி ஆகியவை நடக்கின்றன.