பதிவு செய்த நாள்
18
ஜன
2012
11:01
ஆறுமுகநேரி:ஆறுமுகநேரி பேயன்விளை வடபத்திரகாளி அம்மன் கோயிலில் பஜனை நிறைவு, பரிசளிப்பு விழா நடந்தது.பொங்கல் அன்று நிறைவு நாளில் ஊரில் எல்லா தெருக்களிலும் பஜனை பாடி வந்தனர். கீழத்தெருவில் இளைஞர் மன்றம் சார்பில் ஜெயக்குமார், பூப்பாண்டி ஆகியோர் தலைமையில் இளைஞர் மன்றத்தினர் பஜனை குழுவினருக்கு சிற்றுண்டி வழங்கினர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பஜனை குழுத் தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். செயலாளர் பட்டுராஜகுரு முன்னிலை வகித்தார். பஜனையில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு டிபன்பாக்ஸ், புத்தாடைகள் வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் தர்மகர்த்தா பரமகுரு, கோயில் தர்மகர்த்தா அரசகுரு, ஸ்ரீபொன்மாடசாமி கோயில் தர்மகர்த்தா ராஜேஷ், தர்மகுட்டிசாஸ்தா கோயில் தர்மகர்த்தா கல்யாணகுமார், மந்திரம், இந்து தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அழகேசன், பாலகிருஷ்ணன், ஸ்ரீதர், ராஜகுமார், மதிமுக.,ஒன்றிய செயலாளர் வித்யா சுரேஷ், வாஞ்சிநாதன், செல்லசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.