பதிவு செய்த நாள்
07
ஜூன்
2018
12:06
நாமக்கல்: செவ்வந்திப்பட்டி மாரியம்மன் மற்றும் பிடாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. சேந்தமங்கலம் அடுத்த, செவ்வந்திப்பட்டியில் மாரியம்மன் மற்றும் பிடாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்தாண்டு தேர்த்திருவிழா கோலாகலமாக துவங்கியது. மே, 27ல், மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு தினந்தோறும் அம்மனுக்கு அபி?ஷகம், தீபாராதனை செய்யப்பட்டது. மறுநாள், பிடாரியம்மனுக்கு திருக்காப்பு கட்டுதல், நேற்று முன்தினம் இரவு திருத்தேர் தலையலங்காரம் நடந்தது. நேற்று காலை, பிடாரியம்மன், தூக்குத்தேரில் உலா வந்தார். இன்று காலை, எல்லைக்காவல் எனும் திருத்தேர், ஒற்றை கல்லில் நின்று எல்லை உடைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை; நாளை மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல் மற்றும் திருத்தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர் கள் செய்துள்ளனர்.