பதிவு செய்த நாள்
08
ஜூன்
2018
11:06
கோபி: பாரியூர் வகையறா கோவில்களின் உண்டியல்களில், 6.40 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் வகையறா கோவில்களில், 10 உண்டியல்கள் உள்ளன. இவற்றை திறந்து எண்ணும் பணி, நேற்று நடந்தது. தனியார் பள்ளி மாணவர், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர், எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் தங்கம், 176 கிராம், வெள்ளி, 25 கிராம், 102 அமெரிக்க டாலர் காணிக்கையாக இருந்தது. சில்லரை காசுகள், ரூபாய் என, 6.40 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டிருந்ததாக, அதிகாரிகள் கூறினர். கோபி கார்ப்பரேசன் வங்கியில், அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.