ஆண்டாள் கோயிலில் கூடுதல் மெட்டல் டிடெக்டர் ராஜகோபுர வழியில் விரைவில் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2018 12:06
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடுதலாக மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படுவதால், பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வரும் பக்தர்கள், தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ராஜகோபுரத்தை கொண்ட வடபத்ரசயனர் சன்னதிக்கு, தெற்கு வாசல் வழியாகத்தான் அனுமதிக்கபடுகின்றனர். ஆகமவிதிப்படி ராஜகோபுரம் வழியாகத்தான் பக்தர்கள் கோயிலுக்குள் செல்லவேண்டும். மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படாததால் அனுமதிக்கபடவில்லை. இந்து அமைப்புகள் இங்கும் மெட்டல்டிடெக்டர் கருவி பொருத்தி பக்தர்களை அனுமதிக்க கோரினர்.இதை தொடர்ந்து ராஜகோபுர வாசலில் ராஜபாளையம் ராம்கோ நிறுவனத்தின் சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில் நவீன மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட உள்ளது. இதற்கான கருவிகள் வந்துள்ளநிலையில், பணி முடிந்ததும் பக்தர்கள் ராஜகோபுரத்தின் வழியாக அனுமதிக்கபட உள்ளனர்.