பதிவு செய்த நாள்
08
ஜூன்
2018
12:06
புதுச்சேரி: பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. புதுச்சேரி பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து,கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. மாலை 6:00க்கு மணிமுதல் கால யாக பூஜைகள் நடந்தது. 2ம் தேதி இரண்டாம் கால பூஜை, மூல மந்திர ஹோமம் நடந்தது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகள் துவங்கியது. 3ம் தேதி, காலை 6:௦௦ மணிக்கு, 4ம் கால பூஜை, தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு, கோபுர கும்பாபிஷேகம், 10:30 மணிக்கு, சதானந்த விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சபாநாயகர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக் குழு தலைவர் தேவநாதன், பிருந்தாவனம் மக்கள் நலவாழ்வு சங்க தலைவர் டாக்டர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.