சேத்துார்: சேத்துார் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரம் ஸ்ரீ சுந்தரநாச்சியாரம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்று நாட்கள்யாகசாலை பூஜை நடந்தன. மூன்று நாளாக மங்கள இசை, கணபதி ஹோமம்,கஜ பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், திருமுறை பாராயணம், யாகசாலை பூஜைகள் நடந்தன.இதை முன்னிட்டு அதிகாலை 4:00 மணி முதல் திரவிய ஹோமம்,மகாபூர்ணாஹூதி, தீபாராதனையுடன் யாகசாலையிலிருந்து குடங்கள் புறப்படுதல் நடந்தது. இதையடுத்து திருச்சி பிரபாகர சிவாச்சார்யார் மற்றும் கார்த்திகேயசிவாச்சார்யார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளைஸ்ரீ சுந்தரநாச்சியார் அம்மன் சேவா டிரஸ்ட் மற்றும் அனைத்து ஊர் பொது மக்கள்செய்திருந்தனர்.