பதிவு செய்த நாள்
08
ஜூன்
2018
12:06
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த, கோடிப்புதூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், பரண் ஏறும் நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, அகரம் அருகே உள்ள, கோடிப்புதூர் கிராமத்தில், பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 4ல் துவங்கியது. தொடர்ந்து, பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம், தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீரெடுத்து, அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தேவிரஹள்ளி கிராமத்தினர், அம்மனுக்கு பொட்டு தாலி, புடவை போன்ற பொருட்களைக் கொண்டு வந்தனர். பகல், 12:00 மணிக்கு, பரண் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. பின், பூசாரி சாட்டை போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பல்வேறு பகுதியில் இருந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.