தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு அருகே மாரம்பாடி பெரிய அந்தோணியார் ஆலய விழா நடந்தது. ஜன., 8 முதல் காலை, இரவில் கொடி பவனி நடைபெற்றது. ஜன., 16 ல் கொடியேற்றமும், நேற்று முன்தினம் இரவு, பெரிய கோயிலில் இருந்து முத்தனம்பட்டி வரை தேர்பவனி, வாணவேடிக்கை நடந்தது. நேற்று பிற்பகல் 1 மணிக்கு முத்தனம் பட்டியில் இருந்து பெரிய கோயில் வரை, பூக் களால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி வந்தது.