பதிவு செய்த நாள்
18
ஜூன்
2018
01:06
பெ.நா.பாளையம்:ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலத்தில் உள்ள அருள்மிகு தட்சிணாமூர்த்தி, கல்யாண சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை, 8:30 மணிக்கு பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம் ஆகியன நடந்தன. 9:30 மணிக்கு தீபாராதனையும்,10:15 மணிக்கு ஸ்ரீஞானகணபதி, ஸ்ரீஞானேஸ்வரி, ஸ்ரீநர்மதேஸ்வரர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில், கல்யாண சுப்பிரமணியர் கோவில் மற்றும் மூலஸ்தான மூர்த்திகளுக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 10:45 மணிக்கு கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு மகாஅபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை, மதியம் பிரசாத வினியோகம் ஆகியன நடந்தன. மகாகும்பாபிஷேக வழிபாடுகள், மதுரை திருப்பரங்குன்றம், ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயம் முதல்வர் சந்தரசேகர சிவாச்சார்யர் தலைமையில் செய்யப்பட்டிருந்தன. விழாவில், ஓங்காராநந்த மகாசுவாமிகள் மற்றும் ஆர்ஷ வித்யா குருகுல நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.